டெல்லி மாநகராட்சி தேர்தல்: மந்தகதியில் வாக்குப்பதிவு!

 

Voting Underway For Delhi MCD Polls

 

டெல்லி மாநகராட்சிக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

 

டெல்லியில் ஆம்ஆத்மி அரசு அமைந்துள்ள நிலையில், 272 வார்டுகளைக் கொண்ட டெல்லி மாநராட்சிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 1 கோடியே 30லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். மொத்தமுள்ள 13 ஆயிரத்து 22 வாக்குச் சாவடிகளில், 3,284 வாக்குச்சாவடிகள் பதற்றம் மிக்கவை என்றும், 1,464 வாக்குச்சாவடிகள் பதற்றம் மிக்கவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது. 10 மணி வரை 9 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரப்பிரதே தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், டெல்லி மாநகராட்சியையும் கைப்பற்றுமா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.