திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

சென்னை:
திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல நடைபெறும். தேர்தலில் மாதவராவ் வெற்றிபெறும் பட்சத்தில் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.