டெலிகாம் துறை அறிவித்துள்ள விஆர்எஸ் திட்டத்தால் பலன்?

புதுடெல்லி: டெலிகாம் துறையால் அறிவிக்கப்படவுள்ள விஆர்எஸ் (VRS) திட்டத்தால், ரூ.1,080 கோடி சேமிக்கப்படலாம் என்றும், அத்திட்டத்தை, தோராயமாக 9500 பணியாளர்கள் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக, விஆர்எஸ், சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஆர்எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் நிகழும் வருடாந்திர சம்பள ஒதுக்கிட்டில் மட்டும் ரூ.1,080 கோடி மிச்சமாகும் என்று கணக்கிடப்படுகிறது.

தற்போது, ரூ.2500 கோடிகள் வருடாந்திர சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது.

இந்த விஆர்எஸ் திட்டத்தை சுமார் 9500 பணியாளர்கள் தேர்வுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.