அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளிக்க வந்த செய்தி

டில்லி

பாஜகவின் எம் பி துஷ்யந்த் சிங் மற்றும் அவர் தாயார் வசுந்தர ராஜேஆகியோருக்கு கொரோனா பாதிப்பில்லை என்னும் செய்து வந்துள்ளது.

பிரபல இந்தி பாடகி கனிகா கபூர் லண்டன் சென்று கடந்த 15 ஆம் தேதி மும்பை திரும்பி வந்தார்.  அதற்கு அடுத்த நாள் அவர் உத்தரப் பிரதேசம் லக்னோ சென்று மூன்று நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.  அன்று இரவு நடந்த விருந்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே, அவர் மகன் துஷ்யந்த் சிங் உள்ளிட்டோருடன் அவர் கலந்துக் கொண்டார்.

அதன் பிறகு துஷ்யந்த் சிங் குடியரசுத் தலைவர் ஹேமமாலினி உள்ளிட்டோருக்கு அளித்த விருந்தில் துஷ்யந்த் சிங் கலந்து கொண்டுள்ளார்.  கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதை அவர் டிவிட்டரில் பதிந்துள்ளார்.  இதனால் வசுந்தர ராஜே மற்றும் துஷ்யந்த் ஆகியோர் தங்களைத் தனிமைப் படுத்துக் கொண்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தனது நிகழ்சுளை ரத்து செய்துள்ளார்.  துஷ்யந்த் சிங் உடன் குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் கலந்துக் கொண்டவர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இன்று வசுந்தர ராஜே மற்றும் துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தி மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசியல் வாதிகளுக்கு மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளித்துள்ளதாக மக்கள் கூறி உள்ளனர்.