cutajdgvmaegbv3
சந்தானத்துக்கும் வி.டி.வி.கணேஷுக்கும் நல்ல நட்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். வி.டி.வி.கணேஷ் தனது மூன்றாவது புரோடக்ஷனை நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளார், அந்த திரைப்படத்தின் ஹீரோ சந்தானம் தான். இந்த திரைப்படத்தை இயக்குநர் சேதுராமன் இயக்குகின்றார்.
முதலில் வி.டி.வி.கணேஷ் தயாரித்த “இங்க என்ன சொல்லுது” படத்தில் ஹிரோ இவர் தானே, முதலில் எல்லோரும் சிம்பு தான் ஹீரோ என்று நினைத்த போது சிம்புவும், சந்தானமும் கெஸ்ட் ரோலாக இப்படத்தில் உள்ளனர் என்றதும் படம் எதிர் பார்த்த அளவுக்கு ஓட வில்லை.
அந்த படத்தின் மூலம் ஏற்பட்ட கடனை அடைக்க இப்போது சந்தானத்தை வைத்து முழு நீள காமெடி படத்தை எடுத்து அதன் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்துள்ளார் வி.டி.வி.கணேஷ்