மீண்டும் உருவாகும் விடிவி மேஜிக் ; கார்த்திக் டயல் செய்த எண்….!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் ஸீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.

அதே போல் சில நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் கெளதம் மேனன் வீடியோ கால் மூலமாக,ஐபோனில் எப்படி 4K தரத்துடன் குறும்படம் எடுப்பது போன்ற டிப்ஸ்களை கொடுத்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த குறும்பட டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.த்ரிஷா.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகத்தை போல இந்த டீசர் அமைந்திருக்கிறது. சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என பல ஓ.டி.டி தளங்கள் இருக்கின்றன என திரிஷா போனில் கார்த்திக்கு சொல்வது போல இந்த டீசர் அமைந்திருக்கிறது.

இதனால், கார்த்திக் யார் ? சிம்பு இந்த ஷார்ட் பிலிமில் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.