நாட்டில் பருந்துகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்

டில்லி

நாட்டில் பருந்துகள் எண்ணிக்கை சுமார் 30% குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நமது நாட்டில் இருவகை பருந்துகள்  காணப்படுகின்றன.   அதில் ஒருவகை பருந்துகள் மலைப்பாங்கான காடுகளில் காணப்படுகிறது.  மற்றொரு வகை பருந்துகள் நகர்ப்புறங்களில் காணப்படும்.   ஆனால் இரு வகை பருந்துகளுமே உயரமான மரங்களில் வசிக்கும் வழக்கம்  உடையவை.

தற்போது நகர மயமாக்கல் காரணமாக பல இடங்களில் காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.  இதனால் பருந்துகள் வசிக்க இடமில்லாமை ஏற்பட்டுள்ளது.  பருந்துகள் கணக்கெடுப்பில் கடந்த 2016 ஆம் வருடம் 999 பருந்துகள் காணப்பட்டன.   ஆனால் தற்போது எடுக்கபட்ட கணக்கெடுப்பில் இவைகளில் சுமார் 30% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது

இவ்வாறு பருந்துகள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.