ம.பி. தேர்தல் : வியாபம் ஊழலின் சூத்திரதாரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டி

போபால்

வியாபம் தேர்வு ஊழலின் சூத்திரதாரி என கூறப்படும் ஜகதீஷ் சாகர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ம.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்லூரி சேர்க்கைக்கும் வேலை வாய்புக்கும் வியாபம் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தபட்டது. அந்த தேர்வில் கடும் ஊழல் நடந்துள்ளதாக புகர் எழுந்தது. இதற்கு பாஜக அரசு தான் காரணம் என காங்கிரஸ் தொடந்து கூறி வருகிறது.
இந்த வியாபம் தேர்வு ஊழலின் சூத்திரதாரி என கூறப்படுபவர் ஜகதிஷ் சாகர் என்னும் கட்டுமான கட்டமைப்பாளர் ஆவார். இவரை கடந்த 2013 ஆம் வருடம் குற்றவியல் பிரிவு காவலர்கள் மும்பையில் ஒரு தங்கும் விடுதியில் கை து செய்தனர். அதன் பிறகே இந்த வழக்கில் பல உண்மைகள் வெளீவந்தன.

இந்த ஊழலில் பல அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதில் பாஜக அமைச்சர் லால் சிங் ஆர்யா மற்றும் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் மக்கன்லால் யாதவின் மகான் ரண்வீர் யாதவ் ஆகியோர் பாஜக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

தற்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜகதீஷ் சாகர் பிந்த் மாவட்டத்தில் உள்ள கோஹத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார். அவர் தனது வேட்பு மனுவில் தனக்கு ரூ.1.82 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன் மீது வியாபம் வழக்கு மற்றும் பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பிரதிப் ஆகிர்வாரிடம் வியாபம் கேசில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜகதீஷ் சாகர் தாம் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தம்மை வழக்கில் சிக்க வைத்து விட்டதாக கூறி போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆகவே அவருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது.

இந்த வியாபம் வழக்கில் சம்மந்தம் உள்ளதாக கூறப்படுபவர்களில் ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகானும் ஒருவர். அவர் தேர்தலில் போட்டியிடும் போது ஜகதீஷ் சாகர் ஏன் போட்டியிடக்கூடாது” என பதில் கேள்வி கேட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vyaam scam kingpin is contesting in MP election under BSP Ticket
-=-