அமைச்சர் ஜெயக்குமார் ‘ஆடியோ’ பெண்மீது சூப் கடை இளைஞர் மோசடி புகார்

சென்னை:

மைச்சர் ஜெயக்குமார் தன்னுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்தார் என்றும், இதன் காரணமாக தங்களுக்கு குழந்தை இருப்பதாகவும் கூறிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், அமைச்சர்மீது புகார் கூறிய பெண் மீது வியாசர்பாடியை சேர்ந்த சூப் கடை உரிமையாளரான இளைஞர் ஒருவர் மோசடி புகார் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து தினசரி செய்தியாளர்களை சந்தித்து அதிரடி கருத்துக்களை  நக்கலாகவும், தெளிவாகவும் தெரிவித்து வரும் அமைச்சர் ஜெயக்குமார் மீது  பிராட்வே பகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண், தன்னுடன் பாலியல் ரீதியிலான தொடர்பில்  ஜெயக்குமார் இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதற்கு ஆதாரமாக ஒரு பிறப்பு சான்றிதழும் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெயக்குமார்,  ‘அது தன்னுடைய குரல் அல்ல. ‘மார்பிங்’ செய்யப்பட்டிருக்கிறது.’ என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

ஆனால், டிடிவி தரப்பு வெற்றிவேல், இந்த குற்றச்சாட்டு உண்மை என்றும், தேவையென்றால் இதுகுறித்து வீடியோ வெளியாகும் என்றும், அவர்கள் இடைத்தேர்தல் சமயத்தில், திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்ததாகவும் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண்ணாண  சிந்து மீது சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் வசித்துவரும், .சந்தோஷ்குமார் என்ற 26 வயது இளைஞர் பரபரப்பு புகார் கூறி உள்ளார். சந்தோஷ்குமார் அந்த பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார்.

இவர், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில்,  நான் மண்ணடி புது தெருவில் ‘சூப்’ கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு பிராட்வே பிரபாத் குடியிருப்பில் வசித்தும் வரும் சிந்து என்ற பெண் தினமும் வருவார்.

இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கும், எனக்கும் நெருக்கம் அதிகமானது.  அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நானும் சிந்துவும் நெருக்கமாக பழகி வந்தோம்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் சிந்து எனதுவீட்டிற்கு வந்து,  ‘எனது அம்மாவுக்கு இதயக் கோளாறு இருக்கிறது. உடனே ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும்’ என்று கூறி அழுதார்.

இதை நம்பி நான், எனது  திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகைகளை சிந்துவிடம் கொடுத்தேன். அதன்பிறகு பலமுறை சிந்துவை அழைத்தபோது, எனது போனை எடுக்கவில்லை.

இதையடுத்து நான்  நான் அவருடைய வீட்டுக்கு சென்றேன். அப்போது, அங்கு சிந்துவும், அவரது தாயார் சாந்தியும், மேலும் 2 பேர் இருந்தனர். நான் சிந்துவை அழைத்த போது, ‘அவருடைய தாயார் என்னை அவமானப்படுத்தினார்.

சிந்துவை தவறான உறவுக்கு அழைத்தாய் என்று போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன்’ என்றும் மிரட்டினார். அவருடன் இருந்த வர்களும் என்னை மிரட்டினர். இதனால், தன்னை மிரட்டிய சிந்துவின் தாயார் மற்றும் சிந்துமீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்ட ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனுமீது இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.