ஊராரின் கிண்டலுக்கு பயந்து பச்சிளம் குழந்தையை கொன்ற பெற்றோர்

--

ராரின் கிண்டலுக்கு பயந்து பெற்ற குழந்தையை கொன்ற தம்பதியின் செயல் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்தவர் திலிப் சக்கரவர்த்தி (வயது 48). இவரது மனைவி சுமதி.  சக்ரவர்த்தி கூலி வேலை செய்கிறார்.

இந்தத் தம்பதிக்கு  3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் சிலருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சுமதி கர்ப்பமானார். பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கர்ப்பமானது குறித்து திலீப் சக்ரவர்த்தி – சுமதி தம்பதி கவலைகொண்டனர். ஊரார் கேலி கிண்டல் செய்வார்களே என வருந்தினர்.

இந்த நிலையில் சப்திபாரி கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு தம்பதியர் சென்றபோது குழந்தை பிறந்தது. உறவினர்கள், குடும்பத்தினர் கிண்டல் கேலிக்கு பயந்த  தம்பதியர் குழந்தையை கொன்று குளத்தில் வீசியுள்ளனர்.

குழந்தை உடல் குளத்தில் மிதப்பது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திலிப் சக்கரவர்த்தி – சுமதி தம்பதியே தங்கள் குழந்தையை கொன்று வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஊராரின் கேலி கிண்டலுக்கு பயந்து பச்சிளங்குழந்தையை பெற்றோரோ கொன்று குளத்தில் வீசிய சம்பவம் மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.