ஊதிய முரண்பாடு களையகோரி 4 நாட்களாக உண்ணாவிரதம்: 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்

சென்னை:

திய முரண்பாடுகளை களைய கோரி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்று 4வது நாளாக அவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை:

“சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில்  தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள்  கடந்த 23-ந்தேதி டி.பி.ஐ. கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவர்களை போலீசார் கைது செய்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்  ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்ட  ஆசிரியர்கள், அங்கு தொடர்ந்து  உண்ணாவிரத போராட்டத்தை  தொடர்ந்தனர். இவர்களில் பலர் தங்களது  கைக்குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியைகளை அங்கிருந்து இரவோடு இரவாக அகற்றி வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அடைத்தனர்.

அவர்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக   நீடிக்கிறது.

அவர்களிடம்  தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களின் வாக்குறுதிகளை ஏற்க மறுத்து உண்ணவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் உண்ணாவிரத போராட்டம்  4-வது நாளாக நீடிப்பதால் பல  ஆசிரியர் – ஆசிரியைகள் சோர்வைடைந்து படுத்த படுக்கையாக உள்ளனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர்.

அவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக  அவர்கள் போராட்டம் நடத்தி வரும் பள்ளி வளாகத்திலேயே 2 மருத்துவர்கள், 2 நர்சுகள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவர113 பேர் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களை அழைத்து பேசி உடனடியாக தீர்வு காண வேண்டும். ஒரு நபர் கமி‌ஷன், நிதி நிலையை காரணம் காட்டி எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதை காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது.

9 வருடமாக போராடி வருகிறோம். ஊதிய முரண்பாட்டை களைய அரசு உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவோம் இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம் என்றனர்.