கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்:

ந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

terrors

தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து வருகிறது. இதுபற்றி ஏதேனும் வாய் திறந்தால் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து தானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக ஆகிவிடும் என்பதாலேயே இந்த மெளனத்தை அது கடைப்பிடித்து வருகிறது.

இதற்கிடையே அடிபட்ட தீவிரவாதிகள் தங்கள் கோபத்தை வேறு வழிகளில் காட்டக்கூடும் என்ற எச்சரிக்கை உளவுத்துறை மூலம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று கருதப்படுகிறது. எனவே காபூல் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.