சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்…!

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடித்து வருவதாகத் தகவல். மேலும் சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.