நள்ளிரவு முதல் சன் நெக்ஸ்ட் செயலியில் ‘வால்டர்’ ஒளிபரப்பு….!

--

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது . இந்த படத்தில் சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர் .

இந்தப்படம் மார்ச் 13 ஆம் தேதி வெளியானது.கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை சன் நிறுவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில், ஜூன் 22 ஆம் தேதி தங்களுடைய சன் நெக்ஸ்ட் செயலியில் இப்படத்தை ஒளிபரப்பவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

You may have missed