அயோத்தி::

.பி. மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரியங்கா காந்தி, அங்கு கல்லூரி ஒன்றில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.  அப்போது சாதி மதம் இல்லாத இந்தியாவே எனது உணர்ச்சிப்பூர்வமான கனவு என்று கூறினார்.

உ.பி.மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி, தனது சகோதரர் மற்றும் தாயார் போட்டியிடும்,  அமேதி, ரேபரேலி தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

அங்கு மாணவர்களுடன் சந்திப்பு, கிராமங்களில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் என்று மக்களிடம் நெருங்கிய பழகி அசத்திய பிரியங்கா 3 பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து வாரணாசி சென்றவர், மோடிக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பின்னர் அயோத்தி சென்று அங்கு வரலாற்று சிறப்புமிக்க  ஹனுமான்  கோவிலில் பிரார்த்தனை செய்கிறால்ர.

முன்னதாக மாணவர்களிடம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பிரியங்கா, பிரஞ்சலி (Pranjali) என்ற மாணவி  உங்களின் எதிர்கால கனவு என்ன என்ற கேள்விக்கு பரியங்கா பதில் அளித்தார். அப்போது,  மதம் குறித்து கேள்வி எழுப்பாத இந்தியாவையே விரும்புகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  சாதி மற்றும் மதம் மீது தாக்குதல் தொடுப்பவர்களிடம் கடுமையான எதிர்ப்பை காட்டுவேன் என்று கூறியவர், மதம் குறித்து கேள்வி கேட்காத உணர்வுபூர்வமான  இந்தியாவை சந்திக்க விரும்புவதாகவும், அதுவே தனது உணர்ச்சிப்பூர்வமான கனவு என்றும்  கூறினார்.

சாதி, மதம் கேள்விப்படாத ஒரு இந்தியாவை நான் பார்க்க விரும்புகிறேன் என்றவர், நாட்டின் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமான உரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார். “பெண்களுக்கு ஆண்கள் சமமாக இருப்பதை இந்தியா பார்க்க வேண்டும், இன்று அவர்கள் நடத்தப்படும் வழிமுறையை அவர்கள் நடத்தவில்லை என்று கூறியவர்,  அனைவருக்கும் அரசியலமைப்பில் சமமான உரிமைகள் உள்ள  பாகுபாடு இல்லாத  இந்தியாவை நான் பார்க்க விரும்புகிறேன், ஆனால் தான்  சம உரிமைகள் பற்றி அறிந்திருப்பதுடன், அதை வலதுசாரி அமைப்புகள் எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதையும் புரிந்துகொள்கிறேன் என்றும் கூறினார்.

பிரியங்காவின் பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  பிரியங்காவின் கருத்துகள் அவரது சாதி மற்றும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக தாக்கியுள்ளது