புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் சிக்கிய பெண் தாதா ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில், அவர் மாநில பாஜக தலைவர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை உடனே கைது செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார். இவர்  கடந்த 2017ம் ஆண்டு  கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கு காரணமாக, காரைக்கால் பெண் தாதா எழிலரசி என்று கூறப்பட்டது. சாராய வியாபார போட்டிகாரணமாக இந்த கொலை நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு (எ) ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த  2013-ம் ஆண்டு கூலிப் படையினரால் ராமு படுகொலை செய்யப்பட்டார்.  இவருக்கு 2 மனைவிகள் உண்டு. அதில் ஒருவர்தான் எழிலரசி.  இந்த கொலைக்கு  அப்போதைய சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் காரணம் என்று எழிலரசி குற்றம்சாட்டி வந்தனர்.  இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் 2017-ம் ஆண்டும் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்க உள்பட  பல்வேறு வழக்குகளில் எழிலரசி கைதாகி, பிறகு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் 2018-ம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதையடுத்து மீண்டும்  ஜாமீனில் வெளிவந்த அவர், காரைக்கால் நேதாஜி நகரில் வசித்துவந்தார்.  பின்னர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால், அவரை தேடப்படும் குற்றவாளி என மாநில காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில் எழிலரசி திடீரென புதுச்சேரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலானது. புதுச்சேரியில் வரவிருக்கும்  நிலையில், ரவுடி இளவரசி  சேர்ந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, அவரை உடனே கைது செய்யவும், அவருக்கு துணையா இருப்பவர்களையும் கைது செய்ய மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.