சென்னை,

ஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாத்து வருவது வக்பு வாரியம்.

மேலும் இஸ்லாமியர்களின் வாழ்வை வளமாக்க, கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் அடக்கதளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.

தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் கால அட்டவணையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு முஸ்லிம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 06.09.2017 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

வேட்பு மனு தாக்கல் செய்தல் 07.09.2017 (வியாழக்கிழமை)
(முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி
நாள் 14.09.2017 (வியாழக்கிழமை)
(பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பு மனு சரிபார்த்தல் 15.09.2017 (வெள்ளிக்கிழமை)
(முற்பகல் 11.00 மணிக்குள்)

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி
நாள் 18.09.2017 (திங்கட்கிழமை)
(பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பாளர் இறுதிப் பட்டியல்
வெளியிடப்படும் நாள் 19.09.2017 (செவ்வாய்கிழமை)

தேர்தல் அவசியமானால் 04.10.2017 (புதன்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு

காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1.ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும்.

05.10.2017 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.