விழுப்புரத்தில் வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டம்! பொன்முடி பங்கேற்பு

விழுப்புரம்:

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற  வார்டு மறுவரையறை குறித்து நடைபெற்ற பொதுமக்கள்  கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏ பொன்முடி பங்கேற்றார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர்  மாவட்டங்களை பிரித்து, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உதமாகின.

இந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையில்,  இந்த மாவட்டங் களுக்கான உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை தமிழகஅரசு நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் இன்று  நடைபெற்றது.

இநத் கூட்டத்தில், திமுக எம்எல்ஏ க.பொன்முடி, இரா.மாசிலாமணி, திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.