ரஹானேவின் சிறப்பான சதம் – புகழும் ஷேன் வார்னே & கவாஸ்கர்!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய தற்காலிக கேப்டன் ரஹானே அடித்த சதம், ஆஸ்திரேலிய மண்ணில் எதிரணி கேப்டன்கள் அடித்த சிறப்பான சதங்களுள் ஒன்று என்று புகழ்ந்துள்ளார் சுழற்பந்து ஜாம்பவான் ஷேர் வார்னே. சுனில் கவாஸ்கரும் தன் பங்கிற்கு புகழ்ந்துரைத்துள்ளார்.

ரஹானே டெஸ்ட் போட்டியில் அடித்த 12வது சதமாகும் அது.

வார்னே கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய மண்ணில், எதிரணியின் கேப்டன்கள் அடித்த சிறந்த சதங்களுள் ரஹானேவின் சதமும் ஒன்று” என்றுள்ளார்.

கவாஸ்கர் கூறியுள்ளதாவது, “இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில், ரஹானே அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்று. அவரின் சதம், இந்தியர்கள் லேசாக வீழ்ந்துவிட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியாவுக்கு தெரிவிப்பதாக உள்ளது.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களில் சுருண்ட இந்திய அணி, எந்தளவிற்கு மனதளவில் மீண்டுள்ளது என்பதை தெரிவிப்பதாக உள்ளது இந்த சதம்” என்றுள்ளார் அவர்.