நெட்டிசன்:

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று ஒரு புறம் மக்களை பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். இது உண்மையா? பொய்யா? என்று ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் பிளாஸ்டிக் இட்லி குறித்த தகவல் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து வாட்ஸ் அப்பில் உலா வரும் ஒரு தகவல்….

‘‘இன்று ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தோம். எதார்த்தமாக சமையல் கட்டுக்கு சென்ற போது கண்ட காட்சி மனதை உலுக்கியது. பிளாஸ்டிக் டம்ளரில் இட்லி மாவை ஊற்றி தட்டில் வைத்து வேக வைத்தனர். இட்லி வேக தண்ணீர் சுமார் நூறு டிகிரியில் தண்ணீர் கொதிக்க வேண்டும். அப்போது இட்லி மட்டும் வேகாது, இட்டிலியுடன் பிளாஸ்டிக்கும் சேர்த்து வேகும். இதன் வேதி வினை கண்டிப்பாக உடலை பாதிக்கும். இது கல்யாண வீட்டார் விருந்துக்கு அழைத்து விஷம் வைக்கும் செயலாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான புகைப்படமும் சமக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.