சென்னை:

கோயம்பேடு – நேரு பூங்கா இடையே இனறு முதல் சுரங்கப்பாதையில்  மெட்ரோ ரயில் இயங்கத் துவங்கியுள்ளது.

இதில் பயணிப்போர் தவறான நடத்தையில் ஈடுபட்டால்  விதிக்கப்படும் சிறைத்தண்டனை, அபராதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பட்டாசு, வெடிப்பொருட்கள் போன்ற ஆபத்தான பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 5 ஆயிரம் அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது 250 ரூபாய் அபராதம்.

ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை 5 ஆயிரம் அபராதம்.

ரயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்

ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது சட்ட விதிகளுக்கு உட்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்.

-இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.