இளம்பெண்களே எச்சரிக்கை: சென்னை கல்லூரி மாணவிகளின் புகைப்படம் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் வெளியீடு! அதிர்ச்சி

சென்னை:

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தோழிகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம்  முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த நிலையில், அந்த படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச இணையதளம் ஒன்று திருடி, ஆபாசமாக சித்திரித்து, அதன் இணையதளத்தில் மீள்பதி விட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்ட உள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியின் மாணவிகள் தங்களது பட்டமளிப்பு பிரிவுஉபச்சார விழாவில் எடுத்த குழு புகைப்படங்களை தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். 10 மாணவிகள் ஒன்றாக சேர்ந்து எடுத்த செல்பி படத்தை ஒரு மாணவி தனது  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க இணையதளம் ஒன்றில் அந்த மாணவிகளின் புகைபடங்கள் ஆபாச மாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக ஒரு மாணவியின் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, அந்த இணையதளத்துக்கு சென்று பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இணையதளத்தில், சம்பந்தப்பட்ட மாணவிகளை ஆபாசமாக சித்தரித்தும், அவர்கள்  பாலியல் தொழில் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிக்ள, இதுகுறித்து  தங்களது கல்லூரியின் முதல்வரிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து கல்லூரி சார்பில் பூக்கடை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார், இந்த ஆபாச இணையதளம்  அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வருவதை கண்டுபிடித்து உள்ளனர். முகநூலில் பதிவிடப் படும் இளம்பெண்களின்  படங்களை திருடி, இதுபோன்று ஆபாசமா சித்தரித்து மார்பிக் செய்து அந்த இணையத்தில் ஏராளமான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய இளம்பெண்கள் பலர் தங்களது செல்ஃபி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக் பெற்று வருகின்றனர். ஒருசிலர் இதுபோன்ற லைக்குகளாக பல்வேறு போஸ்களில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இதுபோன்ற படங்களை திருடுவதற்காவே சில ஆபாச குழுக்கள் செயல்பட்டு வருவது எத்தனைபேருக்கு தெரியுமோ தெரியவில்லை…

ஏற்கனவே இணையதளங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், சமீப காலமாக, பாலியல் சம்பந்தப்பட்ட முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன.

இளம்பெண்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ளாத வகையில், முன்னெச்சரிக்கை யாக இருக்க வேண்டியது அவசியம், முகநூல், வாட்ஸ்அப் போன்ற  சமூக வலைதளங்களில்  தங்கள் புகைபடங்களை பகிர்வதை கூடுமானவரை தவிர்க்க  வேண்டியதும் கட்டாயம்… பெண்களே உஷார்…