10 அடி உயரத்தில் மணற்புயல் சுழன்றடிக்கும்..! ஐக்கிய அரபு எமிரேட் அரசின் எச்சரிக்கை!

அபுதாபி,

ஐக்கிய அரபு எமிரேடில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகவேகத்தில் மணற்புயல்  வீசும் என்பதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் இன்று  வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், எதிர்வரும் நாட்களில் குறைந்தது 10 அடி உயரத்தில் மணல் புயல் சுழன்று அடிக்கும், காற்றில் அதிகளவில் தூசி கலந்திருக்கும்.

இதனால் சாலையின் 2000 மீட்டர் தொலைவுக்கு எதிரில் வருவோர் யார் என்று தெரியாத அளவுக்கு நிலைமை இருக்கும் என்று பயமுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக விபத்துகள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளதால்  அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் வாகனங்களில் செல்வோர் ஜாக்கிரதையாக பயணிக்கும்படி  வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கடல்காற்றின் வேகம் 50 லிருந்து 60 கிலோமீட்டராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் இன்று  31 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.

இதன் வெப்பநிலை  34 டிகிரி செல்சியஸ்  வரை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.