எச்சரிக்கை: ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர் கவனிக்க..

--

பொதுவாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. அதிலும் இந்த தீபாவளி நேரத்தில் தங்கள் போனஸ் பணத்தில் பெரும்பகுதியை ஆன்லைன் ஷாப்பிங்கில் செலவிடுவோர் பலர்.

அவர்கள் கவனிக்க வேண்டிய விசயம் இது.

ஆன்லைன் விற்பனை குறித்து லோக்கல் சர்க்கில்ஸ் (LOCAL CIRCLES) என்ற இணையதளம் ஏறக்குறைய 30 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது.  அதில் கடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவிகித வாடிக்கையாளர்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என்று 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என்று 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என்று 21 சதவிகிதம் பேரும். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் என்றும்  தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள், விளையாட்டு பொருட்கள்,  பைகள் போன்ற பொருட்கள்தான் போலியானவையாக இருக்கின்றன என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.