மூக வலைத்தளங்களை ஒட்டுமொத்தமாக எல்லா செயலிகளையும் மொத்தமாக பயன்படுத்துப வர்கள் 2.82 பில்லியன் ( 282 கோடி பேர் ) என்று https://www.statista.com/ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

இந்த சமூக வலைத்தளங்கள்  நாம் பயன்படுத்துவதைப்பொறுத்து அது நமக்கு வரமாகவும் அமைகிறது, அதே போல் சாபமாகவும் அமைகிறது

சமூக வலைத்தளங்களால் கடைக்கோடியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு துறையில் தங்களை சமூகத்தின் முன் அடையாளப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பினை சமூக வலைத்தளங்கள் வழங்கி வருகின்றன. அதே சமயம் இப்படி வாய்ப்புகளை தேடி வருபவர்களைக்கொண்டு ஒரு கூட்டம் அவர்களை தவறாக திசை திருப்பவும் செயல்படுகிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கேற்றார்ப்போல் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.

உங்களுக்குத் தெரியுமா?

யுபிஐ பணப்பரிவர்த்தனையும், உங்கள் செல்போன் எண்ணும் நீங்கள் கொடுக்கும் உங்கள் செல்போன் எண் மூலம் உங்கள் ஜாகத்தைக்கண்டறியக்கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளது

இன்று கூகிள் பே, பே டிஎம், பீம் போன்ற செயலிகள் நம் செல்போன் எண்ணை பிரதானமாகக் கொண்டே செயல்படுகின்றன. அதை வைத்து என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது

சமூக வலைத்தளக் கணக்குகள்

வெளி நாட்டில் உள்ள தமிழர்களை குறிவைத்து சில கும்பல்கள் இயங்குவதாக சிலர் தெரி வித்துள்ளதன் அடிப்படையில் எப்படியெல்லாம் அந்த கும்பல்கள் இயங்குகின்றன என்பதைப் பற்றிய சிறிய அலசல்

1.திடீரென்று தமிழ் ஆர்வலர் தலைத்தூக்கி ’’ அழகே தமிழே, அழகிய மொழியே ,எனதுயிரே’’ என்ற பாடலின் வார்த்தைகளை மட்டும் கொண்டு ஒரு பேஸ்புக் கணக்கு துவங்கப்பட்டு உலக தமிழரிடையே விளம்பரம் செய்யப்படும். அதைப் பார்த்த நம் மக்களும் அந்தப்பக்கத்திற்கு விருப்பம் தெரிவித்து அதை தொடர்ந்து பார்த்துவருவார்கள்.

2. நீங்கள் அவர்கள் போடும் ஏதேனும் பதிவிற்கு விருப்பம் தெரிவித்தபின் அவர்கள் முன்பு போட்ட விருப்பம் தெரிவித்த பதிவை மாற்றி வேறு ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செய்திகளை போட்டு அதை நீங்கள் விரும்பியது போன்ற திரைப்பிடிப்பை சேமித்து வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து அவர்கள் உங்களை மிரட்டவும் வாய்ப்பு உள்ளது. (பதிவைப் பொறுத்து)

3.தமிழ் , தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க என்று கூவும்போது வெளிநாட்டு தமிழர்கள் இயல்பாகவே நாம் நம்மூரில்  இல்லை, நம் சார்பாக அவர்கள் செய்யும்போது அவர்களை ஊக்கப்படுத்தலாம் என நீங்கள் நினைத்து உதவி செய்வார்களென்று அவர்கள் உசுப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்

4.சில சமயம் ஏதாவது ஒரு பிரச்னைக்கு உங்களை தூண்டவும் செய்வார்கள், அவ்வாறு தூண்டப் படும்போது உணர்ச்சி வசப்பட்டு பேசும் சில வார்த்தைகள் உங்களுக்கு எதிரியாகலாம்.

எனவே உங்கள் சமூகவலைத்தள கணக்குகளை நீங்கள் முறைப்படி உங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தங்களுக்கு என்ற பெயர் இல்லாத பொதுவான பெயருடன் கூடிய எந்த சமூக வலைத்தள கணக்கையும் நீங்கள் பின்தொடரவேண்டாம்

உதாரணம்

தமிழ் வாழ்க, உலகத்தமிழ் ,தமிழ் அறம், அமெரிக்கத்தமிழர் , கனடத்தமிழ் என எல்லா நாடுகளுடன் கூடிய முகவரியும் வரும், அப்படி பின்தொடர விரும்பினால் நண்பர்கள் வழியாக உறுதி செய்த அந்தப் பக்கத்திற்கு விருப்பம் தெரிவியுங்கள்

பணம் என்று கேட்டு ஏதேனும் செய்திகள் வந்தால் செய்திகளை அனுப்பியவர் யார் என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்

ஒட்டுமொத்தமாக சமூக வலைத்தளங்களில் உங்கள் கணக்குகளை கையாளும்போது எந்த உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் பாதுகாப்பாக எப்படி கையாளுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

-செல்வமுரளி

Warning: Some social website Groups that