சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உறுதியான காரணத்தால் தேர்தலை ரத்து செய்து  அறிவித்து உள்ளது.

ஆர்.கே.நகருக்கு இன்னும் இரண்டு நாளில் ( 12ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெற்றுவந்த தகவலைதொடர்ந்து  அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி ரெய்டு நடத்தினர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவனங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு  அரசியல் கட்சியினரும் கருத்துக்களை கூறி வரும் வேளையில், முன்னாள் மத்திய அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் முறையான பணமா?  அல்லது கருப்பு பணமா?

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு செய்வதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்து விடலாம் என்று மத்திய அரசு கூறியதே, தற்போது என்ன ஆயிற்று? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.