சிஎன்என் பத்திரிகையாளரை மீண்டும் அனுமதிக்க டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்

சிஎன்என் பத்திரிகையாளரை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கும் பத்திரிகை அனுமதி சீட்டு வழங்க படுகிறது. இதில் ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு நிரந்தர அனுமதி சீட்டு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிரந்தர அனுமதிச் சீட்டு பெற்றவர்களில் ஒருவர் சிஎன்என் செய்தி தொலைக்காட்சி பத்திரிகையாளரான ஜிம் அகோஸ்டா. இவரது அனுமதிச் சீட்டை அமெரிக்க அதிபர் ஆணைப்படி ரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்தது.

இதை எதிர்த்து வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் ஜிம் அகோஸ்டாவுக்கு மீண்டும் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை மாளிகை நிர்வாகம் பத்திரிகையாளர் உரிமைகளை மீறி உள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சி என் என் தொலைக்காட்சி ”இந்த தீர்ப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதற்கு முழுத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்” என அறீவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.