வாஷிங்டன்:

செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால் கடும் அபராதம் விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் முதல் வாஷிங்டன் மாகாணத்தில் அமலுக்கு வருகிறது.

வாகன ஓட்டுனர்கள் செல்போன் மட்டுமின்றி இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்துவதை இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. போக்குவரத்து சிக்னலில் நிற்கும் போது கூட இவற்றை பயன்படுத்தக் கூடாது.

கடந்த 2015-15ம் ஆண்டில் டிரைவர்களின் கவனம் திசை திரும்பியதால் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்தது. இதை தொடர்ந்தே இந்த புதிய சட்ட மசோதா தயார் செய்யப்பட்டது.

மாகாண கவர்னர் ஜெய் இன்ஸ்லி கூறுகையில்,‘‘ செல்போன்களை கீழே வைத்துவிட்டு உயிர்களை காக்க வேண்டும் என்பது தான் இந்த புதிய சட்டத்தின் நோக்கம். செல்போனுடன் வாகனம் ஓட்டும் டிரைவர் மிகவும் ஆபத்தான டிரைவர்.

குடி போதையில் .08 அளவு ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து வாகனம் ஓட்டும் டிரைவரோடு செல்போனுடன் வாகனம் ஓட்டும் டிரைவர் ஆபத்தானர்கள்’’ என்றார்.

முதலில் சில மாதங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்னர் முதல் முறை குற்றத்திற்கு 136 டாலர் அபராதம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் 2வது முறை இதேபோன்று சிக்கினார் 236 டாலர் அபராதம் விதிக்கப்படும். அதோடு நோட்டீசும் அளிக்கப்படும்.

அதோடு வாகனத்தை ஓட்டும் போது புகைபிடித்தல், சாப்பிடுதல், புத்தகம் படித்தல் போன்றவையும் குற்றமாக கருதப்பட்டு 99 டாலர் வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு எலக்ட்ரானிக்ஸ் எந்திரங்களுடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ் விபரம் காப்பீடு நிறுவனத்தின் இணையதளம், போக்குவரத்து ஆவண பதிவேடு இணையதளத்திலும் பதிவாகிவிடும்.