ரஞ்சி கோப்பையில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் வாசிம்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை 40 வயதாகும் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார்.

wasim

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரராக இருந்து வந்தவர் வாசிம் ஜாபர். 40 வயதாகும் இவர் ஆரம்பகால கட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

ரஞ்சி கோப்பையின் 3-வது போட்டியில் விதர்பா, பரோடா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் 3-வது வீரராக களம் இறங்கிய வாசிம் ஜாபர் 284 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 153 ரன்கள் குவித்தார். இதுமட்டுமின்றி கேப்டன் பாசல் உடன் இணைந்து 300 ரன்களை வாசிம் சேர்த்தார்.

வாசிம் ஜாபர் 97 ரன்னைத் தொட்டபோது ரஞ்சி டிராபியில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார். ரஞ்சி தொடரில் வாசிம் ஜாபர் 11056 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பாக அமோல் முசும்தார் எடுத்த 9202 ரன்கள் தான் ரஞ்சி தொடரில் எடுக்கப்பட்ட அதிக ரன்களாக இருந்து வந்தன.