ரஃபேல் விமான ஒப்பந்தம் போடப்பட்டபோது நான் அதிபராக இல்லை: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்

ஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே தான் பதவியில் இருந்தார்,   என்று தற்போதைய  பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறி உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையே ரஃபேர் போர் விமான ஒப்பந்தம் கையெழுத் தானது. அப்போது பிரான்சின் அதிபராக பிராங்கோயிஸ் ஹொலண்டே இருந்தார் என்றும், அவரும், இந்திய பிரதமர் மோடியும்தான் இதுகுறித்து பேசினார்கள் என்று மேக்ரோன் கூறி உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே  8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட ஒப்பந்தபடி, ரஃபேல் மற்றும் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும்படி இந்திய அரசு வற்புறுத்தியதாக  பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில்  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அது குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்.

‘ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட போது நான் பதவியில் இல்லை. ஆனால் இது இரு நாட்டு அரசுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தம். ராணுவ ஒத்துழைப்புத் தொடர்பாக போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

ஹாலண்டே, பிரான்ஸ் அதிபராக இருந்த போதுதான் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என்று கூறி உள்ள மேக்ரோன் தான் கடந்த ஆண்டுதான் அதிபராக பதவி ஏற்றதாக தெரிவித்து உள்ளார்.

பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிய விவரம் பிரான்ஸ் நாட்டிலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்போதைய அதிபர்,  மேக்ரன் ஹாலண்டேவின் கருத்தை மறுத்துள்ளார். அதுபோல, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டசால்ட் நிறுவனமும் மறுத்துள்ளன.

ஹாலண்டேவின் கருத்தால் இந்தியாவில் ரஃபேல் விவகாரம் தொடர்பான சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால், தற்போதைய அதிபரோ ஒப்பந்தம் குறித்து. முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று கூறி மேலும் எந்தவித தகவலும் தெரிவிக்க  மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.