பிரிசூட்டின் விபரீதம்: ஆற்றில் விழுந்த திருமண ஜோடி…. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது….

பம்பா:

திருமணத்திற்கு முன்பாகவே நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் தற்போது பிரிசூட் எனப்படும் திருமணத்திற்கு முன்பாகே ஒன்றாக, ஜோடியாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற புகைப்படும் மற்றும் வீடியோ எடுப்பது பேஷனாகி வருகிறது.

அதுபோல, கேரளாவில் ஒரு திருமண ஜோடியை,  ஆற்றுப் படகில் அமர்ந்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஜோடி எதிர்பாராதவிதமாக, படகு கவிழ்ந்து ஆற்றிலேயே தவறி விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் விழுந்த இடம் ஆழம் குறைவான பகுதி என்பதால், அவர்கள் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு முன்பாக புகைப்படம் பிரிசூட்  படம் எடுக்க விரும்பிய திருமண ஜோடி, அதற்கான பம்பா நதியில்  படகில் அமர்ந்து செல்லும் வகையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது,  திருமண ஜோடி, ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது போன்று படம் பிடிக்க முயன்ற நேரத்தில், எதிர்பாராதவிதமாக படகில் இருந்து கீழே விழுந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள் படகில் சென்ற இடம் ஆழம் குறைவாக இருந்த ஆற்றுப்பகுதி என்பதால், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.