கொரோனா வைரஸ் பயத்தால் வீடுகளில் முடங்கியுள்ளீர்களா…? அப்போ இதை கட்டாயம் பாருங்கள்…!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி, பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. தற்போது கட்டாயமாக வீட்டில் இருங்கள் என உத்தரவு போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

பலரும் பொழுது போக்க திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக “வைரஸ்” படத்தை பார்க்க சொல்கின்றனர் சில இணையவாசிகள்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்த படங்களுள் முக்கியமானது வைரஸ் திரைப்படம்.

இந்த படம் நிபாஃ வைரஸ் பற்றி வித்தியாசமான கோணத்தில் எடுத்து கூறிய படம். வைரஸ் எப்படி பரவுகிறது, அதனால் எப்படி பாதிப்பு நிகழ்கிறது என்பதை அழகாக காட்டியிருப்பார்கள்.