மேரிகோமுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்த மத்திய அமைச்சர்

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் குத்துச்சண்டை பயிற்சி வழங்கியது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

merikom

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் சமீபத்தில் பிட்னஸ் சேலஞ்ச் என்ற பெயரில் அவா் மேற்கொண்ட முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தொிவித்தனா்.

இந்நிலையில் 5முறை உலகச் சாம்பியன், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தனது ட்விட்டா் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

rathore

அந்த வீடியோவில் மேரிகோம் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரை குத்துகிறார். அவர் தடுக்கிறார். மீண்டும் அமைச்சர் குத்துகிறார். இதுபோன்ற ஒரு ஜாலியான குத்துச்சண்டைக்கான பயிற்சியை வழங்குகிறாா் மத்திய அமைச்சர் ரத்தோர். மேரிகோமுக்கு அமைச்சர் பயிற்சி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மோிகோம் “உங்களது ஆதரவுக்கும், உற்சாகத்துக்கும் நன்றி” என்று மத்திய அமைச்சருக்கு பதில் அளித்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published.