பணக்காரர்களுக்கு மட்டுமே காவல்காரர் தேவை : பிரியங்கா காந்தி

பிரயாக் ராஜ்

ணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்காரர் தேவை என காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ”காவல்காரரே திருடன் ஆனார்” என தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் #நானும் காவல் காரன் தான் என்னும் ஹேஷ்டாக் ஐ பிரபலமாக்கி உள்ளார்.

அது மட்டுமின்றி பாஜக தலைவர்கள், தொண்டர்கள், அனுதாபிகள் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் தங்கள் பெயருக்கு முன் காவல்காரர் (சௌக்கிதார்) என போட்டுக் கொண்டுள்ளனர்.  இது மிகவும் பரவி வருகிறது.

உத்திரப் பிரதேச மக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இன்று கங்கை யாத்திரை என்னும் தனது பிரசார பயணத்தை  பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி உள்ளார்.

இந்த பயணத்தின் தொடக்கத்தின் போது பிரியங்கா, “பிரதமர் தனது பெயருக்கு முன்னால் காவல்காரர் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளார்.

என்னிடம் ஒரு விவசாயி, ’பணக்காரர்களுக்கு மட்டுமே காவல்காரர் தேவை,  எங்களுக்கு நாங்களே காவல்காரர்’ என சொன்னார். 

உண்மை தான்.  காவல்காரர்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே தான் தேவை.  ஏழைகளுக்கோ விவசாயிகளுக்கோ தேவை இல்லை” என உரையாற்றி உள்ளார்.

அத்துடன் தமது உரையில் அரசை எதிர்த்து பேசுபவர்கள் மீது தேச விரோத சட்டம் பாய்வதாகவும் அதுதான் மோடியின்  அரசியல் மற்றும் ஜனநாயகம் எனவும் தெரிவித்துள்ளார்.

You may have missed