ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில்  கழிவு நீர்ம சுத்திகரிப்பு நிலைய நீரை ஆய்வு செய்த போது   போலியோ வைரஸ் சி (serain ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்ச போலியோ வைரஸ் சி (serain ) ) தான் போலியோ தாக்குதலை ஏற்படுத்துகிறது.
download
இதையடுத்து உடனடியைக ஜெனிவாவில் இருந்து இரண்டு லட்சம் தடுப்பூசிகள், விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.  ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் வரும் ஜூன் 20 முதல் 26ம் தேதி வரை நடக்கும் தடுப்பூசி முகாமில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.
ஏற்கெனவே இந்த வைரலாஸ் பீகார், குஜராத். உபி,  டில்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த 2012ம் வருடம் முதல் இந்தியாவில் போலியோ பாதிப்பு இல்லை. இதையடுத்து, “போலியோ இல்லாத நாடு” என்று இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் 2014ம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.