காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 8.30 மணியளவில், 16,678 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை தற்போது நின்றுள்ளதால், நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி அளவுக்கு நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: breaking news, dam, extensive security arrangements, latest news, latest tamil news, live tamil news, Mettur dam, mettur dam opened, narendra modi, news, news tamil, news today tamil, news updates, newshour debate, puthiyathalaimurai, puthiyathalaimurai news, Security arrangements, tamil, tamil actress, Tamil cinema, tamil crowd, tamil nadu, tamil nadu news, tamil news, tamil news live, tamil news today, tamilnadu, tamizh news, today, top stories, trichy
-=-