மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, விநாடிக்கு 236 கன அடி நீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று அது மேலும் அதிகரித்து காலை 11 மணி நிலவரப்படி 259 கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கும் வரும் நீரின் அளவை விட, பல மடங்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 45.99 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நீர் திறக்கப்படுவதன் காரணமாக இன்று காலை 11 மணியளவில் 45.86 அடியாக சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.