மழை பெய்தால் தண்ணீர் தேவை பூர்த்தியடையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

போதிய அளவு மழை பெய்த உடன், தமிழகத்தில் தண்ணீர் தேவை பூர்த்தியடையும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “தமிழகத்தில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. கேரளாவில் மழை தொடங்கி, கோயம்புத்தூரிலும் இந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் பெய்யவில்லை. இப்போது கூட மழை வருவதுபோல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கோவை சுற்றுவட்டாரத்தில் கூட அண்மையில் மழை பெய்தது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மழை பொழியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மக்களுக்கு எங்கெங்கு என்னென்ன தேவையோ, அதை உடனடியாகச் செய்துகொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் மழை நன்றாகப் பெய்தவுடன் தண்ணீர்த் தேவை குறைந்து சீரடையும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.