மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், சேலம் மாவட்டத்திலும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்கு போதிய நீரிண்மை போன்ற சூழல் ஏற்படுமோ என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நேற்று 456 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 10 மணி நிலவரப்படி 398 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதேநேரம், அணைக்கு வரும் நீரை விட, கூடுதலாக கடந்த ஒரு வார காலமாகவே நீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 45.22 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 45.11 சரிந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் சரிந்து வருவதால் தங்கள் மாவட்டத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.