சென்னை

சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு இட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளன.   இதனால் திந்த வருடம் தண்ணீர் பஞ்சம் இருக்காது என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்த ஒரு பதிவை தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பீட்டர் ஜான் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு :

சென்னை அணைகள் : சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.  இந்த வருடம் சென்னைக்கு மிகச் சிறந்த வருடமாக அமையும்.  புழல், செம்பரம்பாக்கம், பூனிட் ஆகிய ஏரிகள் 2015 க்கு பிறகு மீண்டும் நிரம்பி வழிந்துள்ளன.  எனவே இன்னும் ஒரு வருடத்துக்கு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் இருக்காது.  தற்போது சென்னைக்கு அதிக அளவான 800 எம் எல் டி வழங்கப்படுகிறது.   இதைத் தவிரக் கிருஷ்ணா நீர் பங்கும் கிடைத்துள்ளது,.

மேட்டூர் அணை : தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணையில் தொடர்ந்து 3 ஆம்  ஆண்டாக அதிகளவில் நீர் நிரம்பி உள்ளது.  நீர் பாசனத்துக்கு ஏராளமான நீர் திறந்த போதி8லும் ஜனவரி மாதம் அணையில் 80% வரை நிரம்பி உ:ள்ளது.

பவானி சாகர் அணை : தமிழ்நாட்டின் 2ஆவது மிகப் பெரிய அணையான பவானி சாகரிலும் நீர் மட்டம் அதிக அளவில் உள்ளது.  கடந்த 5 மாதங்களாக இங்கு 80% அதிக அளவில் நீர் நிரம்பி உள்ளது.

கோவை அணைகள் : வழக்கத்தை விட தற்போது தென் மேற்கு பருவமழை ஜனவரியில் கூட மிக அளவில் பெய்ததால் இங்குள்ள அனைத்து அணைகளிலும் அதிக அளவில் நீர் உள்ளது. பரம்பிக்குளம் அணையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக முழு அளவிலும் தற்போது 90% அளவிலும்  நீர் உள்ளது.  ஆழியாறு அணையில் 95% நீர் மட்டம் உள்ளது.

நீலகிரி அணைகள் : நீலகிரி அணைப்பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தேவைக்கு அதிகமாகப்  பெய்த போதிலும் இங்கு மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் சற்றே குறைந்து காணப்படுகிறது.

கன்னியாகுமரி அணைகள் : இங்குள்ள இரு பெரிய அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இன்னும் தலா 91% மற்றும் 84% நீர் நிரம்பி உள்ளன. மூன்றாவது பெரிய அணையான கொடையாறு அணையில் 100% நீர் உள்ளது. அதே வேளையில் சிற்றாறு அணை 1 மற்றும் 2இல் 70% நீர் உள்ளது.

திருநெல்வேலி அணைகள் : பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் ஜனவரி மாதம் வரலாற்றில், முதல் முறையாக நிரம்பி வழிந்துள்ளன.  அது மட்டுமின்றி வடக்கு பச்சையாறு போன்ற சிறு சிறு அணைகளிலும் 100% நீர் உள்ளது.

தேனி அணைகள் : ஜனவரிக்கு பிறகும் பெரியாறு அணையில் அதிக அளவில் நீர் வரத்து இருந்ததால் தற்போது 70% கொள்ளளவில் நீர் உள்ளது.  அத்துடன் வைகை அணையில் 100% நீர் உள்ளது.  எனவே மதுரைக்கு இது நல்ல வருடமாகும்.

திருவண்ணாமலை அணைகள் : கிருஷ்ணகிரி அணையில் முழு நீர் மட்டம் உள்ளதால் திறந்து விடப்படுகிறது.  சாத்தன்னுர் அணையில் 76% நீர் உள்ளது.

மொத்தத்தில் தமிழகத்தில் பல அணைகளின் நீர் மட்டம் தாராளமாக உயர்ந்துள்ளது.  தென் மேற்கு பருவமழை ஜனவரியிலும் எய்துள்ளதே இதற்குக் காரணமாகும்.  வழக்கத்தை விட இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் நீர் மட்டம் மிக மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.