கல்லணையில் இருந்து காவிரி நீர் திறப்பு

ஞ்சாவூர்

ஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது.    அதை ஒட்டி காவிரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர அணை வந்தது.  மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதால் கடந்த 19ஆம் தேதி காவிரி நீர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது.

இவ்வாறு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்து அடைந்தது.   அங்கு திறக்கப்பட்ட நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையை வந்தடைந்துள்ளது.    இன்று கல்லணையில் இருந்து வினாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கபட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஓ எஸ் மணியன்,  நடராஜன், வளர்மதி ஆகியோர் கல்லணையில் இருந்து நீரை திறந்துள்ளனர்.     இதை ஒட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் காவிரி ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்ட கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகலுக்கு பாய்கிறாது.   இந்த நீர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நீர் வளம் ஏற்படுத்ஹ உள்ளது.

You may have missed