ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆரணி:  கனமழை காரணமாக, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆரணியாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிவர் புயல் காரணமாக ஆந்திரமாநிலத்தில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள பிச்சாட்டூர் அணை நிரம்பி வழிகிறது. தற்போதுஉபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஆரம்பத்தில் 1500 கனஅநீர் திறக்கப்பட்டட நிலையில் தற்போது 3ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரானது வியாழக்கிழமை தமிழக எல்லையான சுருட்டப்பள்ளி வந்தடையும்  இதன் காரணமாக,  ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக ஆரணியாற்றில் நீர் வந்தடையும். இறுதியில்  பழவேற்காடு சென்றடையும். அதனால் ஆற்றின் இருபுறமும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.