சென்னை: சென்னை  மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்ட நிலையில்,  தற்போது தண்ணீர் அளவு 5000 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நிவர்புயல் கரையை கடந்ததால், மழை பெய்வதும் குறைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியாதால், நேற்று மதியம் அதிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆரம்பத்தில் 1000 அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.  ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி மதியம் 3 மணியளவில் வினாடிக்கு 1,500 கனஅடி நீரும், 4.30 மணியளவில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து மாலை ஆறு மணியளவில் 2,000 கனஅடி அதிகரித்து 5,000 கனஅடியாக திறக்கப்படுகிறது.   இந்நிலையில் தற்போது ஒன்பது மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து  9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு இருந்து 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது.