தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தமிழகஅரசுதான் காரணம்

மதுரை:

மிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தமிழகஅரசுதான் காரணம் என்றும்,  வறட்சி மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும்,  அமைச்சர்கள் வீடுகளுக்கு மட்டும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்தவர்,  மக்கள் நீரின்றி தவிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணமே தமிழக அரசு தான் என்று குறைகூறிய வர்,.  நீர்நிலைகளை முறையாக தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக மக்கள் திண்டாட வேண்டிய நிலை வந்திருக்காது என்றார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பிரச்சனையை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களை பற்றி சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.