ட்டா, உத்திரப்பிரதேசம்

த்திரப்பிரதேசத்தில் ஒரு தலித் குடும்ப திருமணத்துக்கு குடிநீர் விற்பனையாளர் குடிநீர் விற்பனை செய்ய மறுத்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள எட்டா என்னும் ஊரில் சமீபத்தில் திருமணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.   இந்த திருமண வீட்டார் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   இந்த ஊரில் அனைத்து திருமணங்களுக்கும் குடிநீர் பாட்டில்கள் வழக்கமாக ஒரு வியாபாரி விற்பனை செய்து வந்துள்ளார்.

அவரிடம் இந்த திருமண வீட்டார்கள் குடிநீர் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் அதற்கு இவர்கள் தலித் வகுப்பினர் என்பதால் குடிநீர் விற்க மறுத்துள்ளார்.   இது குறித்து மணமகள் மற்றும் மணமகன் வீட்டினர் மிகவும் மனத்துயரம் அடைந்துள்ளனர்.

அந்தப் பகுதி சமூக நல அதிகாரியிடம் அந்த குடிநீர் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுத்து இது போல் வேறு யாரிடமும் அவர் நடக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும் என புகார் ஒன்றை மணமகள் வீட்டார் அளித்துள்ளனர்.   மேலும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் இதே புகாரை உ பி முதல்வருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.