நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்: சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் பகுதிகளின் பட்டியல்

சென்னை: நெம்மெலியில் உள்ள ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் அடையார், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி ஆலை, மார்ச் 17ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.

அதன் காரணமாக, தென் சென்னை பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், மயிலாப்பூர், மந்தவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 15 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் வினியோகத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தேவையான அளவு தண்ணீரை பொதுமக்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நோக்கங்களுக்காக டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கும் வகையில் பொதுமக்கள் பின்வரும் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்:

மயிலாப்பூர், மந்தவெளி: 8144930909

அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர்: 8144930913

கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி: 8144930914

ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர்: 8144930915 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.