நேற்று மொகாலியில் நடந்த ஐ.பிஎல் 2016 போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பரபரப்பான ஆட்டத்தில் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ராகுல் அதி வேகமாக ரன்களைக் குவித்தார். இதையடுத்து அணியின் ஸ்கோர் மள மளவென்று உயர்ந்து 6 ஓவர்களில் 60 ரன்களை எட்டியது. காரியப்ப முதல் ஓவரில் ராகுல் மாற்று கொஹில் அடுத்து அடுத்து விக்கெட் இலக்க பெங்களூர் அணி தடுமாற்றம் ஏற்பட்டது.
வாட்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். டீ வில்லியர்ஸ் மற்றும் சச்சின் பேபி ஆகியோர் பொறுமையாக ஆடினர். ஆட்டத்தின் இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. டீ வில்லியர்ஸ் 64, சச்சின் பேபி 35 ரன்கள் எடுத்தனர்.
FotorCreated
அடுத்து, 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பஞ்சாப் அணி ஆடத்துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆம்லா மற்றும் விஜய் பொறுமையுடன் விளையாடினர். முதல் ஐந்து ஓவர்களில் 45 ரன்களை அந்த அணி எடுத்தது.விஜய் ஒரு புறம் நிலைத்து ஆட, ஆம்லா, சாஹா மற்றும் மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டானிஸ் – விஜய் ஜோடி பஞ்சாப் அணி வெற்றி பெற செய்யும் என்ற நினைத்த ரசிகர்கள் கனவை வாட்சன் தகர்த்தார். அவர், விஜய் விக்கெட்டைய் வீழ்த்தினர். ஆனாலும், ஸ்டானிஸ் பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். வாட்சன் மற்றும் ஜோர்டான் ஆகியோர் கடைசி ஓவர்களில் அபாரமாக பந்துவீசி ரன் எடுக்க முடியாமல் செய்தனர். இதையடுத்து பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் 89 ரன்களையும் ஸ்டானிஸ் 34 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணியைச் சேர்ந்த வாட்சனின் 2/22 என்ற அற்புதமான பந்து வீச்சு அந்த அணியை வெற்றி பெறச்செய்தது. கடைசி நேரம் வரை யாருக்கு வெற்றி என்பதை அறிய முடியாதபடி, மிகுந்த விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.