பேஸ்புக் வாட்ஸ் அப்களுக்கு போட்டியாக வருகிறது…  “ஆலோ’ மற்றும்  ‘டுவோ’!

ன்று இளைஞர்களின் போன்களில் டாக்டைம் கூட இல்லாமல் இருக்கலாம்..  3ஜி நெட் ஒர்க் நிச்சயமாக இருக்கும். காரணம்…  பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும்தான்!

விரல்களோடு சேர்ந்து மூளையும் தேயத்தேய இவற்றைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்  இன்றைய யூத்துகள்.

பேஸ்புக் மூலம் உலகின் எந்த பகுதியில் இருப்பவரோடும் எளிதில் தொடர்புகொண்டு நட்பு பாராட்ட முடிகிறது..

வாட்ஸ்அப் மூலம் மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் எளிதில் ஷேர் செய்ய முடிகிறது.

இதனால் தனது  ஜி-மெயிலை அனைவரும் ஒதுக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் கூகுள் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே பேஸ்புக், வாட்ஸ்அப்.. இந்த இரு ஆப்களுக்கும் போட்டியாக   கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியது.

ஆனாலும் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றோடு போட்டி போட முடியவில்லை.

ஆகவேதான் இப்போது அடுத்த முயற்சியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்!    இதன் மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியும் இருக்கிறது. கூடுதலாக  நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் இருக்கின்றன.

இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் காட்டும்.

Exc21

“டுவோ”  ஆப்பின் ஸ்பெஷாலிட்டி,  துல்லியமான வீடியோ காலிங் செய்யமுடியும் என்பதே.

பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், இதில் உடனடியாக கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

பார்ப்போம்.. காலப்போக்கில் வெற்றிபெறப்போவது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பா.. அல்லது “ஆலோ’ மற்றும்  ‘டுவோ’ ஆப்ஸ்களா என்று!

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Wattsapp, -Duo, Aloe, competition, Facebook, world, ஆலோ, உலகம், டுவோ, பேஸ்புக், வாட்ஸ்அப்
-=-