எல்லையில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்: பதற்றம்!

பர்கோட்டி,

த்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பர்கோட்டி, சமோலி எல்லை பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் சீன  ராணுவத்தினர்  இரண்டு முறை இந்த பகுதியில் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 25 ம் தேதி சீன ராணுவத்தை சேர்ந்த சுமார் 20 வீரர்கள், சமோலி மாவட்டப் பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இந்தியப் பகுதிக்குள் அவர்கள் இரண்டு மணி நேரம் சுற்றியதாகவும், அந்த பகுதியில் ஆடு மேய்த்தவர்களை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த இந்தய வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்துவந்து அவர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த சம்பவங்களுக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சிக்கிம் மாநிலம் டோக்லாமில் சீனப் படைகள் அச்சுறுத்தி வரும் நிலையில் இது மேலும் ப‌தற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டில்லியில் ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.