சனி பெயர்ச்சி 12 இராசிக்கும் நன்மை செய்யும்

நெட்டிசன்

னைவரும் பரபரப்பாக சனி பெயர்ச்சி க்கு கோவில் சென்று வழிபட ஆரம்பித்து இருப்பிர்கள் அவரின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்…

பொதுவாகவே சனி கிரகம் உட்பட எந்த கிரகமும் தீமை செய்யும் அல்லது நன்மை செய்யும் கிரகம் என்பது கிடையாது அவரவர் கர்மாவிற்கு ஏற்றவாறு சுய ஜாதகத்தில் கிரகங்கள் பலன் மாறுபடும்.. இருந்தாலும் சனி பகவான் நீதிமான் கடமை தவறாதவர் எந்த ஒரு விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு அது நன்மையா தீமையா அது உங்கள் கையில் உள்ளது

நீங்கள் செய்யும் சிறுதவறு கூட பெரிய விளைவு ஏற்படும் எனவே சனி பகவானின் நற்பலன் அதிகம் பெறுவதற்கும் சரி கெடுபலன்களை குறைக்கவும் சரி வீட்டில் நீங்கள் செய்யும் சிறு சிறு செயல்களை உங்களை காக்கும் சனி பகவானை மகிழ்விக்கும் சில செயல்களை… தினமும் நல்லெண்ணெய் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடுங்கள் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் வீட்டில் தலைமுடி அங்கும் இங்கும் கிடப்பது கூடாது ஒருவர் உங்கள் முன் இல்லாத போது அவரைப் பற்றி தரக்குறைவாக பேசுவது கூடாது.. வீட்டில் உள்ள பெரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.. தண்ணீரை வீண் செய்வது எதற்கெடுத்தாலும் அழுவது தலைவிறி கோலமாக இருப்பது கூடாது.

உங்களால் முடிந்த அளவு ஊனமுற்ற மற்றும் வயதானவர்களுக்கு உதவுங்கள் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் விநாயகரை அல்லது அனுமனை வழிபடுங்கள்..உங்கள் ஊரில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயங்களில் இருக்கும் நவகிரகங்களை வழிபடுங்கள் அவப்போது பசுவிற்கு அகத்திகீரை கொடுங்கள் காகத்திற்கு தினமும் உணவு வையுங்கள்.. (உதாரணத்திற்கு உங்கள் வீட்டிற்கு பெரிய வர் ஒருவர் வருகிறார் அவர் மனம் மகிழும் படி நடந்துகொண்டால் அவர் ஆசிர்வாதம் கிடைக்கும் அது போல தான் சனி பெயர்ச்சியும் அவர் மனம் மகிழும் படி நடந்தால் நல்ல மாற்றங்களை தருவார் என்பதில் ஐயமில்லை…

அசுத்தமான இடத்தில்தான் நோய் பரவும் அது போல் உங்கள் மனதையும் வீட்டையும் சூழ்ந்துள்ள அசுத்தத்தை நீக்கி தூய்மை யாக வைத்து அனுதினமும் ஸ்ரீ ராமஜயம் ஜெபியுங்கள் நீங்கள் எந்த இராசியாக இருந்தாலும் சனி பெயர்ச்சி நல்ல மாற்றத்தை தரும் வாழ்த்துக்கள்

கார்ட்டூன் கேலரி